நம் சுவாமிஜி ஒரு அசாதாரண புனிதர்.
இளம் பருவத்திலேயே தன் குருவும் தாத்தாவும் ஆகிய ஸ்ரீ மாதவன் சுவாமிகளின் வழிகாட்டுதலில் பக்தி மற்றும் ஞான மார்கத்தில் அவர் அடியெடுத்து வைத்தார். தனது பதிமூன்றாவது வயதில் இறை அனுபவத்தில் திளைத்த அவர் அதன்பின் இறைவனுக்கும் இறைவனின் படைப்புக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றார்.
பல தரப்பு மக்கள் சுவாமிகளிடம் ஆறுதலுக்கும் வழிகாட்டுதலுக்கும் வருகின்றனர். சுவாமிஜி இறைவன்பால் பல பக்தி மணம் கமழும் அற்புத பாடல்கள் இயற்றி உள்ளார்.
அகமும் புறமும் பசுமை என்ற தாரக மந்திரத்தோடு “ஈஸ்வர பீடம்” எனும் ஓர் தன்னார்வ தொண்டு அமைப்பை 2011 ம் ஆண்டு துவக்கி பல தொண்டர்களை சீரும் சிறப்புமாக வழிநடத்தி கொண்டிருக்கின்றார்.