ஸ்ரீ லோக பகவதி ஆலயம்
ஈஸ்வர பீடத்தின் ஸ்தாபகரும் நாம் வணங்கி பின்பற்றும் குருவுமான ஶ்ரீ ராஜ ராஜேஷ்வர சுவாமிகள் வழிகாட்டுதலின் படி ஶ்ரீ லோக பகவதியின் ஆலய திருப்பணியை ஈஸ்வர பீடம், ஶ்ரீ லோக பகவதி அறக்கட்டளை மற்றும் பக்தர்கள் திருவள்ளூர் மாவட்டம் மயிலாப்பூர் கிராமத்தில் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
நம் ஆலயத்தில் அருள்பாலிக்க உள்ள தெய்வங்களும் அவர்களின் சிறப்பும்
ஶ்ரீ ராஜ கம்பீர கணபதி
குழந்தைகளுக்கு ஆயுர ஆரோக்கியம் அருள்பவர்
ஶ்ரீ கல்யாண முருகன்
திருமண தடைகளை போக்கி நல்ல வாழ்க்கை துணையை கொடுப்பவர்
ஶ்ரீ லோக சாஸ்தா
குழந்தைகளுக்கு ஆயுர ஆரோக்கியம் அருள்பவர்
ஶ்ரீ லோக பகவதி
பாவத்தை போக்கி உலகத்திற்கு அமைதி மற்றும் நலம் அருள்பவள்
ஶ்ரீ லக்ஷ்மி ஹயக்ரிவர்
சரஸ்வதியின் குரு, ஞான ஸ்வரூபி
ஶ்ரீ வில்வாதிநாதர்
நோயை போக்கி மனதையும் பக்குவப் படுத்துவார்
ஶ்ரீ புஜாக்கிரம மாருதி
பக்தியை ஊட்டி பகவானை காட்டுவார்
ஶ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர்
பயத்தை போக்கி செல்வத்தை அருள்வார்
ஶ்ரீ அஷ்டபுஜ துர்க்கை
மங்கையரின் துன்பத்தை போக்கி மங்கள வாழ்வு அருள்வாள்
ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர்
அணைத்து பாதுகாப்பு அளித்து ஆனந்தத்தை அருள்பவர்
ஆலயத்தின் சிறப்புகள்
- அகஸ்திய பெருமான் வழிபட்ட “சுப திருஷ்டி கணபதிக்கு” அற்புதமான தனி சன்னிதி.
- நாம் அறிந்த, அறியாத அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் ஸ்தலம்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரவர் பிரார்த்தனை பூரணமாக நிறைவேறும் ஓர் அற்புத ஸ்தலம்.
- மரண பயத்தில் இருந்து விடுபட்டு ஆத்ம விசாரம் கூட்டும் ஸ்தலம்.
- ஒவ்வொரு பக்தரின் பிரார்த்தனையும் லோக க்ஷேமத்திற்கான பெரும் பிரார்த்தனையுடன் சேரும் ஸ்தலம்.
- வன்னியும் வேம்பும் இயற்கையாக பிணைந்து ஸ்தல வ்ருக்ஷங்களாக, சிவ சக்தி ஸ்வரூபமாக காட்சி தரும் ஸ்தலம்.
ஸ்ரீ ராஜராஜேஷ்வர சுவாமிஜி
அகமும் புறமும் பசுமை என்ற தாரக மந்திரத்தோடு “ஈஸ்வர பீடம்” எனும் ஓர் தன்னார்வ தொண்டு அமைப்பை 2011 ம் ஆண்டு துவக்கி பல தொண்டர்களை சீரும் சிறப்புமாக வழிநடத்தி கொண்டிருக்கின்றார்